தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

நாகப்பட்டினம்,ஏப்.16: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தேர்தலின் போது சம்பளத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 16ம் தேதி தேர்தல் தேதியை அறிவித்தது. அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டது. இதன்படி நாகப்பட்டினம் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. நாகப்பட்டினம் நாடாளுமன்றத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
இந்த 6 சட்டமன்ற தொகுதிகளில் 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தயார் நிலையில் உள்ளனர். இதற்காக ஆயிரத்து 551 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது.

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் என 3 இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜனநாயக கடமையாற்ற வாக்குப்பதிவு தினத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135 பி-ன் கீழ் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொழிலாளர் துறையின் மூலம் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜனநாயக கடமையாற்ற விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது பணிபுரியும் தொழிலாளர்கள் வரும் 19ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அளிக்காமல் இருந்தால் அந்த புகார்களை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) குமார், செல்போன் எண் 9442912527, நாகப்பட்டினம். தொழிலாளர் உதவி ஆய்வாளர் உருத்திராபதி செல்போன் எண் 6369384512, முத்திரை ஆய்வாளர் சிவகாமி செல்போன் எண் 9965989101 ஆகியோர் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு புகர் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பர் ரகசியம் பாதுகாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அலுவலர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: