மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தில் ரம்ஜான் பண்டிகையன்று 2 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. அப்போது ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வன்முறையை உடனடியாக தடுப்பதற்கு போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று டிஐஜி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த பகுதியில் மேலும் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முர்ஷிதாபாத் டிஐஜி முகேஷை பதவியில் இருந்து நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் பிரமுகர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மற்றும் பாஜ சார்பில் சங்கர் கோஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

The post மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: