திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து அமைச்சர், எம்எல்ஏ பிரசாரம்

 

கம்பம், ஏப்.15: கம்பம் அருகே உள்ள நாராயணதேவன் பட்டியை சொந்த ஊராகக் கொண்ட தங்க தமிழ்ச்செல்வன் தேனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற பகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கம்பம் நகருக்கு வாக்கு சேகரிக்க வந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாக்கு சேகரித்தார். அப்போது எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனும் உடனிருந்தார்.

அமைச்சர் பேசுகையில்,“நாட்டையே கொடூரமான பாதைக்கு அழைத்துச் சென்று, பொருளாதாரத்தை சீரழித்து பத்து ஆண்டுகள் சர்வாதிகாரிகள் ஆட்சி நடந்துள்ளது. பணநாயகத்தை வைத்து ஜனநாயகத்தை முழுமையாக படுகொலை செய்து விட்டார்கள். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் சுயமரியாதை, நல்லிணக்கம், சமத்துவம் அழிந்துவிடும். தேர்தலை ஒட்டி திடீரென்று அதிமுகவினருக்கு சுயமரியாதை, சுய சிந்தனை உள்ளிட்டவைகள் வருகிறது.

உண்மையிலேயே அதிமுக பாஜ கூட்டணி இல்லை என்றால், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மேல் வழக்குகள் தொடர கவர்னர் அனுமதி அளித்திருக்க வேண்டும். வரும் ஏப்.19ம் தேதியை இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தில் விடுதலை பெறும் நாளாக கருதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.

தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில்,“மோடி அரசு தற்போது ஓட்டுக்காக தமிழகத்தை முற்றுகையிட்டுள்ளது. ஆனால் நான் உங்களது அண்டை வீட்டுக்காரன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’’ என்றார். கம்பம் சந்தை திடல் அருகே தொடங்கிய பிரச்சாரம், வடக்குப்பட்டி வழியாக புது பள்ளிவாசல், நாட்டுக்கல், வஉசி திடல், போன்ற முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

 

The post திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து அமைச்சர், எம்எல்ஏ பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: