509 ஆண்டுகள் பழமையான புனித மகிமை மாதா திருத்தல பெருவிழா

 

பொன்னேரி, ஏப். 15: பழவேற்காட்டில் உள்ள புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509ம் ஆண்டு பெருவிழா தேர் பவனியுடன் நடைபெற்றது. பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அமைந்துள்ள 509 ஆண்டுகள் மிகப் பழமையான புனித மகிமை மாதா திருத்தலத்தின் பெருவிழா சனிக்கிழமை இரவு நடந்தது. அன்று திருத்தலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அன்னையின் திருவுருவ சிலை ஏந்திய திருத்தேரானது வான வேடிக்கைகள் முழங்க ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. இதற்கு முன்னதாக 10 நாட்கள் நவநாள் மன்றாட்டு கூட்டங்கள் நடைபெற்றது.

தேர் பவனியின் முதல் நாளான நேற்றுமுன்தினம் குழந்தை இயேசு, புனித சூசையப்பர், அந்தோணியார் உள்ளிட்டோரின் சிறிய தேர்கள் வலம் வர, புனித மகிமை மாதா திருத்தேர் ஊர்வலத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு தரிசித்து, பொறி மற்றும் உப்பு, மிளகினை தெளித்து தங்கள் நேர்தி கடனை செலுத்தினர். நடுவூர் மாதா குப்பம் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்த இந்த பெருவிழாவில் தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர். திருத்தேர்பவனியின் இரண்டாம் நாளான நேற்று மாலை பழவேற்காடு பகுதி மீனவ மக்கள் மற்றும் உள்ளூர் மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாதாவை தரிசித்தனர்.

The post 509 ஆண்டுகள் பழமையான புனித மகிமை மாதா திருத்தல பெருவிழா appeared first on Dinakaran.

Related Stories: