தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்

நாசரேத், ஏப். 15: வெள்ள நேரத்தில் நிவாரணம் தராமல் தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம் என நாசரேத் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்.பி. பேசினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் கனிமொழி எம்.பி., தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்து வருகிறார். அந்தவகையில் நேற்று காலை குரும்பூரில் தனது பிரசாரத்தை துவக்கிய அவர் தொடர்நது நாலுமாவடி, இடையன்விளை கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

இடையன்விளை கிராமத்தில் அவருக்கு கச்சனாவிளை பஞ். தலைவர் கிங்ஸ்டன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மூக்குப்பீறி ஊராட்சிக்கு உட்பட்ட பூங்கா அருகே பஞ். தலைவர் கமலா கலையரசு தலைமையில் காங். கமிட்டி தலைவர் செல்வின், மாவட்ட திமுக பிரதிநிதி கலையரசு, ஊராட்சி செயலாளர்கள் மோசஸ் கிருபைராஜ், முத்துவேல், பால்சாமி, டென்சிஸ்,கோயில்ராஜ்,மணிமாறன்,முத்துகுமார்,மகளிரணி அமைப்பாளர் எல்சி, காங். கமிட்டி செயலாளர் செல்வகுமார் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூக்குப்பீறி பிரசாரத்தில் கனிமொழி எம்பி பேசுகையில் ‘‘ வெள்ள நேரத்தில் நிவாரணம் தராமல் தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம். அதற்கான தேர்தல் இது. வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டிருந்த போது பிரதமர் மோடி வந்து பார்வையிடவும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தரவும் இல்லை. எனவே தமிழ்நாட்டை வஞ்சித்த பிரதமர் மோடி அவர்களுக்கு பாடம் புகட்ட ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜவை கண்டிப்பாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.எனவே தூத்துக்குடி மக்களாகிய உங்களின் அன்பை பெற்றிருக்கிற எனக்கு உதயசூரி யன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் எனக்கு பணி செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்’’ என்றார். பிரசாரத்தில் தெற்கு மாவட்டச் செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் அருண் சாமுவேல், கவுன்சிலர்கள் அதிசயமணி, சாமுவேல், மாவட்ட பிரதிநிதி தாமரைசெல்வன் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம் appeared first on Dinakaran.

Related Stories: