குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் பகல் 12 முதல் 3 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம்

திருத்துறைப்பூண்டி, ஏப். 14: குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம் என்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு உத்தரவின்படியும் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர், தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆகியோர் மற்றும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி மக்களுக்கு நகராட்சி ஆணையர் பிரபாகரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பகல் நேரங்களில் ஓஆர்எஸ் கலந்த குடிநீர் அல்லது வீட்டு முறை பழச்சாறுகளை எடுத்து கொள்ள வேண்டும். தினமும் பகல் நேரங்களில் அதிக அளவு தேவையான குடிநீர் குடிக்க வேண்டும்.

மெலிதான தடிமன் நிறம் கொண்ட இறுக்கமற்ற காட்டன் உடைகள் உடுத்திக் கொள்ள வேண்டும், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம், மிகுந்த அவசியமெனில் குடையுடன் செல்ல வேண்டும். பாதிப்படைந்தவருக்கு தேவையான முதலுதவி வழங்குதல் வேண்டும். பாதிப்படைந்தவரை நிழலில் குளிர்ந்த இடத்தில் அமர வைத்து, குளிர்ந்த துணியால் அடிக்கடி துடைத்து இயல்பான வெப்ப நிலை உள்ள தண்ணீரை தலையில் அடிக்கடி தெளித்து முடித்தவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும், பின் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தேவையான மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும்.

The post குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் பகல் 12 முதல் 3 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம் appeared first on Dinakaran.

Related Stories: