உள்ளூர் பார்க்கிங் தளங்களை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மது விற்ற 7 பேர் கைது

ஈரோடு, ஏப். 14: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் நடத்திய ரெய்டில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட ஈரோடு கருக்குபாளையம், டாக்டர் கலைஞர் நகரை சேர்ந்த குப்பன் மனைவி ஜெரினா (60), மேல் திண்டல், காரப்பாறையை சேர்ந்த குமார்(43), சிவகங்கை மாவட்டம், வன்னிக்குடி, காளையார்கோவில் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் (33), பவானிசாகர், தொப்பம்பாளையம், மாரன் என்கிற மாரப்பன்(40), கர்நாடக மாநிலம், ஆலனஹள்ளி, சாய்நகரை சேர்ந்த ராஜேந்திரகுமார் (38), சித்தோடு நால்ரோடு பகுதியை சேர்ந்த முருகேசன் (45) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல கோபி மதுவிலக்கு போலீசார் நடத்திய ரெய்டில் கள் விற்றதாக நம்பியூர், இருகலூரை சேர்ந்த பொன்னுசாமி (71) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post உள்ளூர் பார்க்கிங் தளங்களை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மது விற்ற 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: