வேலூரில் தினகரன் -விஐடி இணைந்து நடத்திய வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சிக்கு திரண்டு வந்த மாணவ, மாணவிகள்: கலெக்டர், விஐடி துணைத்தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: வேலூர் தினகரன் நாளிதழ்- விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய வெற்றி நமதே மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சி விஐடியில் நேற்று நடந்தது. விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடி துணைத்தலைவர் ஜி.வி.ெசல்வம் முன்னிலை வகித்தார். தினகரன் சென்னை பதிப்பு செய்தி ஆசிரியர் எஸ்.மனோஜ்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி பேசியதாவது:
கடந்த 50 ஆண்டு தமிழ்நாடு வரலாற்றில் ‘தினகரன்’ நாளிதழுக்கு தனி இடம் உண்டு. நல்லதொரு பத்திரிகையாக உள்ளது. மக்களின் பிரச்னைகளை துரிதமாகவும், எளிய தமிழில் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளியிடுவதில் தினகரன், தமிழ்முரசு நாளிதழ்கள் முதன்மையாக உள்ளது. விஐடி நிறுவனம் நம்முடைய வேலூர் மண்ணை சார்ந்து, இங்கே நம்முடைய நிறுவனர் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்டு, உழைப்பே உயர்வு தரும் என்ற ேநாக்கத்துடன் செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பேசியதாவது:
‘வெற்றி நமதே’ என்று உங்கள் மனதில் நினைக்கும்போதே வெற்றி அடைந்துவிட்டீர்கள். மருத்துவப்படிப்புக்கு அதிகமானவர்கள் விருப்பம் தெரிவிக்கிறீர்கள். மருத்துவப்படிப்பு எம்பிபிஎஸ் சீட் கிடைக்காவிட்டால், அதற்கு மாற்றாக ஓமியோபதி, யுனானி, நேச்சுரோபதி படிக்கலாம். மருத்துவத்தில் ஓமியோபதி, யுனானி, நேச்சுரோபதியும் இல்லாவிட்டால் மருத்துவத்துறை சார்ந்த ரேடியாலஜி, நர்சிங் போன்ற நிறைய படிப்புகள் உள்ளன. பிளஸ் 2 முடித்துவிட்டு டிப்ளேமோ முடித்தால் பி.இ இன்ஜினியரிங் எந்த படிப்பு படித்தாலும் சிறப்பாக படிக்க வேண்டும். வேலை நிச்சயம்.

விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:
இன்று மாணவர்களுக்கு எது சரியானது என்று சொல்ல தெரியாது. அவர்களிடம் ஒரு கருத்தும், பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம் ஒரு கருத்தும் இருக்கும். இதற்கு காமன் குரூப் டிஸ்கஷன்ஸ் தேவை. அதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தேவை. ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் படித்த இளைஞர்கள் அதிகம் வேண்டும். அதனால் எங்கு படிப்பது, எப்படி படிப்பது, நாளை நமது எதிர்காலம் என்ன? என்பது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு பேசினர்.

தொடர்ந்து உயர்கல்வி என்ன படிக்கலாம் என்று சிறந்த கருத்துகளை, கல்வியாளர்கள் எடுத்துரைத்தனர். முடிவில் தினகரன் வேலூர் பதிப்பு பொதுமேலாளர் கணேசன் நன்றி கூறினார்.

The post வேலூரில் தினகரன் -விஐடி இணைந்து நடத்திய வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சிக்கு திரண்டு வந்த மாணவ, மாணவிகள்: கலெக்டர், விஐடி துணைத்தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: