தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு ₹200 குறைந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ₹80 உயர்ந்து ஒரு கிராம் ₹6,805க்கும், சவரனுக்கு ₹640 உயர்ந்து ஒரு சவரன் ₹54,440க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதே நேரத்தில் சவரன் ₹55 ஆயிரத்தை தொடுமோ என்ற அச்சமும் நகை வாங்குவோர் இடையே இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று கிராமுக்கு ₹25 குறைந்து ஒரு கிராம் ₹6,780க்கும், சவரனுக்கு ₹200 குறைந்து ஒரு சவரன் ₹54,240க்கும் விற்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பிறகே விலையில் மாற்றம் தெரியவரும்.

The post தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு ₹200 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: