மக்களவை தேர்தலில் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிர்ப்பலை.. பிரச்சாரத்திற்கு கூட அனுமதிக்காத மாவட்டங்கள்!!

சண்டிகர் : மக்களவை தேர்தலில் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2019 தேர்தலின்போது அரியானாவில் 10, ராஜஸ்தானில் 25 என மொத்த இடங்களையும் பாஜக கைப்பற்றியது. இரு மாநிலங்களிலும் 2019 தேர்தலைப் போன்று இந்த தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அரியானாவில் 5 இடங்களும், ராஜஸ்தானில் 6 இடங்களும் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் என பாஜக நடத்திய உட்கட்சி ஆய்வில் தெரியவந்துள்ளது. அக்னிவீர் திட்டம், ஓபிசி பிரிவினருக்கு எதிரான மனநிலை உள்ளிட்டவற்றால் அரியானாவில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் போராட்டம், உள்ளூர் தலைவர்கள் புறக்கணிப்பு உள்ளிட்டவையும் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என உட்கட்சி ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

அரியானாவில் ரோஹ்தக், சோனாபட், சிர்ஸா, ஹிசார், கர்னல் ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு சவாலானதாக இருக்கும் என்றும் ராஜஸ்தானில் பர்மெர், ஷூரு, நகௌர், டௌசா, டோங்க், கரௌலி ஆகிய தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அரியானா மாநிலம் ஹிசார், சிர்ஸா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பாஜகவினர் பிரச்சாரத்துக்கு வரக் கூடாது என சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது என ராஜஸ்தானில் நடைபெற்ற ராஜ்புத்திர சமூகத்தினர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், ராஜஸ்தானில் பல இடங்களில் பாஜகவுக்கு எதிராக ஜாட் சமூகத்தினர் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ராஜ்புத்திரர்களை தொடர்ந்து ஜாட் சமூகத்தினரும் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதால் நெருக்கடி அதிகரத்துள்ளது. 35 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளை கைப்பற்றும் என பாஜக நடத்திய ஆய்விலேயே தெரிய வந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜகவில் இணைந்தவுடன் தன்வார், நவீன் ஜிண்டால் ஆகியோருக்கு உடனே சீட் ஒதுக்கியதால் ராஜஸ்தான், அரியானா பாஜகவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உள்ளூர் தலைவர்களுக்கு வாய்ப்பு தராமல் புதியவர்களுக்கு பாஜக சீட் ஒதுக்கியதால் ஏற்பட்ட அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தலில் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிர்ப்பலை.. பிரச்சாரத்திற்கு கூட அனுமதிக்காத மாவட்டங்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: