காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி தோல்வி: கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி

கர்நாடகா: காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி தோல்வி அடையும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் மொத்தம் இரண்டு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் பாஜக இடையே நேரடியாகப் போட்டி இருக்கும் மாநிலம் என்பதால் இந்த லோக்சபா கர்நாடகாவுக்கு முக்கியமானதாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளரிடம் அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால், அதன் பின் சித்தாராமையா தலைமையிலான அரசு கவிழும் என பாஜக கூறியிருந்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, “கடந்த ஓராண்டாக எனது அரசை கவிழ்க்க பாஜகவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

எங்கள் எம்எல்ஏ-க்களுக்கு ரூ.50 கோடி வரை விலை பேசி, அந்த முயற்சியில் தோற்றுப் போனார்கள்.” என்றார். தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “அதற்கு சாத்தியமில்லை. எங்கள் எம்எல்ஏ-க்கள் வெளியேற மாட்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கூட கட்சியில் இருந்து விலகமாட்டார் என்று முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். கர்நாடகாவில் 5 ஆண்டு ஆட்சியை காங்கிரஸ் கட்சி முழுமையாக நிறைவு செய்யும் என்று சித்தராமையா தெரிவித்தார்.

The post காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி தோல்வி: கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: