பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தபால்வாக்கு செலுத்தினர்

*தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தின் மேற்கே உள்ள கூட்டஅரங் கில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்துவ தற்காக \”பிரத்தியேகமான தபால் வாக்கு செலுத்தும் சேவை மையம்\” அமைக்கப் பட்டுள்ளது. இந்த மையத் தை மாவட்டத் தேர்தல் நடத் தும் அலுவலரான மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங் களில் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு அலுவலர் கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சட்ட மன்ற தொகுதிகள் வாரி யாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளும் முறை குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டது. அந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட மையங்களில் வாக்குப் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத் துவதற்கான சேவை மையங்கள் அமைக்கப் பட்டிருந்தது. அதில் சம்பந் தப்பட்ட அலுவலர்கள் தங் களது தபால் வாக்குகளை செலுத்தினர்.

அதேபோல 85 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர் கள் மாற்றுத்திறனாளி களுக்கு அவர்களின் வீடுக ளுக்கு சென்று தபால் வாக் குகள் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள இதர அலுவலர்கள் தங்க ளது தபால் வாக்குகளை செலுத்துவதற்காக பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தின் மேற்கே உள்ள கூட்ட அரங்கில் பிரத்யேகமாக தபால் வாக்கு செலுத்தும் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மையத்தில் நேற்று (12ம்தேதி) முதல் 14ம்தேதி வரை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், குறிப்பாக காவல்துறையினர், பறக் கும் படை, நிலையான கண் காணிப்புக் குழு, வீடியோ கண்காணிக்கும் குழுக்க ளில் இடம் பெற்றுள்ள அலு வலர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட இதர அலுவலர் கள் தங்களது தபால் வாக் குகளை செலுத்துவதற் காக இந்த பிரத்தியேக தபால் வாக்கு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நேற்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரியக்கூடியகாவல்துறையை சேர்ந்த 563 நபர்களும், ஊர்க்கா வல் படையைச்சேர்ந்த 257 நபர்களும் என மொத்தம் 820 நபர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத் துவதற்கான வசதிகள் ஏற் படுத்தப்பட்டிருந்து. இந்த தபால் வாக்கு சேவை மை யத்தில் தபால் வாக்குப் பதிவு நடைபெறுவதை, பெரம்பலூர் மாவட்ட தேர் தல் நடத்தும் அலுவலரான, மாவட்டக் கலெக்டர் கற்ப கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த சேவை மையத்தில் வாக் குச்சாவடிமையம் போன்றே வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள் நியமிக்கப்பட்டு, வாக்களிக்க வரும் அலுவ லர்களின் பெயர் வாக்கா ளர் பட்டியலில் இடம் பெற் றுள்ளதா என்பது குறித்து சரிபார்க்கப்பட்டு அவர்க ளின் விரல்களில் அழியா- மை வைத்து, அதன் பின் னரே வாக்களிக்க அனுமதி க்கப்பட்டனர். பெரம்பலூர் நாடா ளுமன்றத் தொகுதி க்கு உட்பட்ட காவலர்களும், இதர நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கும் தங் கள் வாக்குகளை செலுத்தி யபின் அந்தக் கவர்களை ஒட்டி போடுவதற்கு தனித் தனியே பெட்டிகள் வைக்க ப்பட்டிருந்தது. மேலும், தபால் வாக்குப் படிவத்தில் சான்றளிக்க உரிய அலுவ லர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர் கள் முன்னிலையில் இந்த தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. 13,14 ஆகிய தேதிகளில் இதர அரசு அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை இந்த சேவைமையத்தில் செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வடி வேல் பிரபு, பெரம்பலூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி வளவன், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலா ளர்கள் சிவா, பாரதிவள வன், தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் அருளானந் தம், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தபால்வாக்கு செலுத்தினர் appeared first on Dinakaran.

Related Stories: