கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்

*குறைந்த நீரில் காத்திருந்து குளிக்கின்றனர்

பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் தற்போது மிகக் குறைந்த அளவு தண்ணீரே விழுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து செல்கின்றனர்.கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், உடல் சூட்டை தணிக்கும் வகையில் அருவிகள், நீர்நிலைகள், குளிர் பிரதேசங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு நீர் வரத்தானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வெள்ளகெவி, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையினால் கும்பக்கரை அருவிக்கு நீர் வருகின்றது.

இந்த நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாது போனதால் அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் முற்றிலும் குறைந்த அளவில் வரும் நீரில் காத்திருந்து குளித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். இருப்பினும் காத்திருந்து குளித்து விட்டு செல்கின்றனர். இந்த நிலையில் பயணிகள் குளிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் அல்லது நீர்வரத்து அதிகரிக்கும் வரை குளிப்பதை தடை செய்யலாம் என ஒருசில பயணிகள் தெரிவிக்கின்றனர்.

The post கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: