அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அகில இந்திய மீனவ சங்கத்தலைவர் கனிமொழிக்கு ஆதரவு தெரிவிப்பு

தூத்துக்குடி, ஏப்.13: அகில இந்திய மீனவ சங்கத்தலைவர் அண்டன் கோமஸ், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுக வேட்பாளர் கனிமொழியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அகில இந்திய மீனவர் சங்க தலைவராக உள்ள அண்டன் கோமஸ் தலைமையில் நிர்வாகிகள் ரதராஜ், புன்னக்காயல் விஜயன், தினேஷ், அண்டன் உள்ளிட்டோர் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தூத்துக்குடி குறிஞ்சிநகரில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து கனிமொழிக்காக தொகுதி முழுவதும் உள்ள மீனவ கிராமங்களில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் அண்டன் கோமஸ் தெரிவித்தார். அப்போது, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ்ஆர்எஸ்.உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அகில இந்திய மீனவ சங்கத்தலைவர் கனிமொழிக்கு ஆதரவு தெரிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: