முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

முத்துப்பேட்டை, ஏப். 11: இந்தியாவில் இஸ்லாமியர்கள் அனைவரும் இன்று ரம்ஜான் கொண்டாடும் நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் சிலர் மட்டும் நேற்று ரம்ஜான் கொண்டாடினர். அதன் வகையில் நேற்று காலை முத்துப்பேட்டையில் உள்ள இஸ்லாமிய அமைப்பான ஜாக் அமைப்பு மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ரம்ஜான் பண்டிக்கையை கொண்டாடினர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டு நேற்று காலை முத்துப்பேட்டை பெரிய கடைத்தெருவில் உள்ள ஜாக் அமைப்பின் ஜாமியா பள்ளிவாசலில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஜாக் அமைப்பை சேர்ந்த இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் கலந்துக் கொண்டனர். தொழுகை முடிந்ததும் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

அதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை-1 சார்பில் புதுத்தெரு ஏ.எஸ்.என்.திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது தவ்ஹீத்ஜமாத் மாவட்ட செயலாளர் அப்துர்ரஹ்மான் மார்க்க சம்பந்தமாக சிறப்புரையாற்றினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் கலந்துக்கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் கிளை-3 சார்பில் தெற்குத்தெரு தவ்ஹீத்ஜமாத் பள்ளிவாசல் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது, கிளை தலைவர் முகமது மீரா லெப்பை கட்டி நானா தொழுகையை நடத்தினார். இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் கலந்துக்கொண்டனர். அதேபோல் அதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை-2 சார்பில் ஆசாத்நகர் மில் திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பேச்சாளர் உமர் பேசினார் இதில் தவ்ஹீத்ஜமாத் மாவட்ட துணைத்தலைவர் தலைவர் அன்சாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் உட்பட தவ்ஹீத்ஜமாத் அமைப்பினர் கலந்துகொண்டனர்.

முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த சிறப்பு தொழுகையில் மாவட்ட தலைவர் யாசர் அரபாத்து தொழுகை நடத்தி பெருநாள் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு ஆதிரெங்கம் கிளை சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை பண்ணைத்தெரு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் முஹம்மது இஸ்ஹாக் பெருநாள் உரை நிகழ்த்தினார். உலகமெங்கும் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க பிரார்த்தனை செய்யப்பட்டது. இத்தொழுகையில, கிளைத் தலைவர் முகமது வஜால், கிளை துணைத் தலைவர் சிராஜுதீன், துணை செயலாளர் அப்துல் முனாப், பொருளாளர் அப்துல் காதர், அணிச் செயலாளர்கள் அப்துல் ஃபத்தாஹ்,யூனுஸ், ஷேக் முகமது பஹத், பஹீம் மற்றும் முன்னால் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.

The post முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Related Stories: