சிறுவளூர் அரசுபள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; கோடையின் வெப்பத்தை குறைக்க இல்லத்தில் மாடித்தோட்டம்

அரியலூர்,ஏப்.11:அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பசுமைப் படை சார்பில் கோடையிலும் குளிர்ச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார்.மதுரை கிருஷ்ணா வேளாண் அறிவியல் மற்றும் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி உதவி பேராசிரியர் நிலன்தாருன் கலந்து கொண்டு பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காடுகள் அழிப்பு பருவநிலை மாற்றம் போன்றவற்றினால் வெப்பம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும்.இவ்வாறு உயரும் வெப்பத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சியுடன் இருக்க மாணவர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் உள்ள சிறிய இடங்களிலும் மாடிகளிலும் தோட்டங்கள் அமைக்க வேண்டும். இதனால் கோடையின் வெப்பத்தை பெருமளவு குறைக்கலாம்.

மாணவர்கள் அதிக நீர்ச்சத்து உள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி, மோர், இளநீர், முலாம்பழம், எலுமிச்சை சாறு, சுரைக்காய் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்திக் கொண்டால் கோடையிலும் குளிர்ச்சியாக உடலை வைத்துக் கொள்ளலாம்.மேலும் காய்கறி தோட்டத்தில் புதிய தொழில்நுட்பங்களையும் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் நுட்பங்களையும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார் .சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் நிகில்ராஜ் மாணவர்களுக்கு தர்பூசணி பழங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செவ்வேள், தங்கபாண்டி, அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சிறுவளூர் அரசுபள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; கோடையின் வெப்பத்தை குறைக்க இல்லத்தில் மாடித்தோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: