மக்களவை தேர்தல் 2024: ஏப்ரல் 12ம் தேதி தமிழகம் வருகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சென்னை: மக்களவை தேர்தலுக்காக ஏப்ரல் 12ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 12ம் தேதியன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். வரும் ஏப்ரல் 12ம் தேதியன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். ஏப்ரல் 12ல் மதுரைக்கு வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கவுள்ளார். ஏப்ரல் 12-ல் சிவகங்கையில் பிற்பகல் 3.50 மணிக்கு பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து ரோட் ஷோவில் அமித்ஷா பங்கேற்கிறார்.

ஏப்ரல் 12ம் தேதி மாலை 6.10 மணிக்கு மதுரையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோவில் பங்கேற்கிறார். ஏப்ரல் 12ம் தேதி காலை 10 மணிக்கு பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தக்காளியில் நடக்கும் ரோட் ஷோவில் அமித்ஷா பங்கேற்கிறார்.

The post மக்களவை தேர்தல் 2024: ஏப்ரல் 12ம் தேதி தமிழகம் வருகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா appeared first on Dinakaran.

Related Stories: