வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்

 

வேதாரண்யம், ஏப்.10: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா துளசாபுரம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நாள்தோறும் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுகுடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து பாமணி வழியாக நாள்தோறும் இப்பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில், 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை.

திருவாரூர் மாவட்டம் பாமணியிலிருந்து தண்ணீர் வழங்கி வந்த நிலையில் பாமணியில் உள்ள குடிநீர் குழாயில் குடிநீர் வடிகால் அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டி விட்டனர். இதனால் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் சாக்கை சட்ரஸ் அருகில் குடிதண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலிந்த கரியாபட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி குடிநீர் வடிகால் வாரிய இளநிலை பொறியாளர் தியாகராஜன் தலைஞாயிறு வருவாய் துறை ஆய்வாளர் காயத்ரி, விேஓ அகிலா உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பாமணியில் போட்டிருக்கும் பூட்டு உடனே அகற்றப்பட்டு தொடர்ந்து தண்ணீர் வழங்குவதாக உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இது சாலை மறியலால் திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

The post வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: