நடப்போம் நலமுடன் வாழ்வோம்!

நன்றி குங்குமம் தோழி

இயந்திர மயமான காலகட்டத்தில் நடந்து செல்வது என்பது அரிதான ஒன்றாக உள்ளது. அனைத்து தரப்பினரும் நேரத்தை கணக்கில் கொண்டு ஏதாவது ஒரு வாகனத்தில் பயணித்து அன்றாட அலுவல்களை முடித்து வருகின்றனர். நம் உடல் நலம் கருதி, நேரம் சிறிதளவு ஒதுக்கி நடந்தால் பலவித உடல் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு வளமுடன், நலமுடன் வாழலாம்.

* நாள்தோறும் நடைப்பயிற்சி செய்வதால் உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள எடை குறைகிறது. மூட்டுக்களை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராகிறது.

* சீனா, நெதர்லாந்து மற்றும் பல மேலை நாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் பலர் வசதியான வாகனம் இருந்தும் நடந்து செல்வதையோ அல்லது சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

*நடைப்பயிற்சி என்பது பொதுவாக தினமும் ஆறு கிலோ மீட்டர் வரை நடப்பதும், நான்கு மணி நேரம் நீந்துவதும், நான்கு மணி நேரம் விளையாடுவதும் இதற்கு சமமானதே.

*அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் லிஃப்ட்டை பயன்படுத்தாமல் படிகளை பயன்படுத்தி ஏறி, இறங்குவதாலும், வீட்டை சுத்தப்படுத்துவதாலும், சிறு குழந்தைகளுடன் விளையாடுவதாலும் நடைப்பயிற்சி என்று தனியாக செய்யாமல் நடைப்பயிற்சியின் அவசியத்தை சமன் செய்து நலமுடன் வாழலாம்.

*நடைப்பயிற்சியை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழிவகை செய்யும். முதுமைப் பருவம் அடைந்தவர்கள் கூட ஆரோக்கியத்துடன் தங்களது இயல்பான வேலைகளை செய்து கொள்ளும் உடல் நலத்துடன் இருக்க செய்ய நடைப்பயிற்சி உதவுகிறது.

*தினமும் சிறிது நேரம் நடைப்பயிற்சிக்கு ஒதுக்கி நலமுடன் நீண்ட காலம் வாழ்வோம்.

– எஸ்.ஜெயந்திபாய், மதுரை.

The post நடப்போம் நலமுடன் வாழ்வோம்! appeared first on Dinakaran.

Related Stories: