தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகிக்கு ஜாமின் தர காவல்துறை எதிர்ப்பு..!!

சென்னை: தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகிக்கு ஜாமின் தர காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தினுடைய 27வது தலைமை மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் இவருடைய உதவியாளர் விருதகிரி என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கண்காணிப்பாளருக்கு பிப்ரவரி 24ம் தேதி புகார் மனு அளித்திருந்தார். அதில் தலைமை மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்டதாக வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாகவும் அதற்கு தனியார் கல்லூரி தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் மதுரையை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் பாஜக தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரத்துக்கு ஜாமின் வழங்கக்கூடாது எனவும் காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் காவல்துறை வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது.

 

The post தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகிக்கு ஜாமின் தர காவல்துறை எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: