காலில் விழுந்த குதிரை திட்டிய ஓபிஎஸ்

பாஜ கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மண்டபம் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாலாந்தரவை கிராமத்தில் அவரை வரவேற்க 3 நாட்டிய குதிரைகளை தொண்டர்கள் ஏற்பாடு செய்து, தெருக்களில் ஓபிஎஸ் ஓட்டு கேட்டு வரும்போது பிரசார வாகனத்திற்கு முன்பு நடனமாட விட்டு அழைத்துச் சென்றனர்.

ஒரு இடத்தில் ஓபிஎஸ் வேனிலிருந்து இறங்கி நடந்து வாக்கு சேகரித்தார். அப்போது குதிரை ஓட்டி ஒருவர், தனது குதிரையை ஓ.பன்னீர்செல்வத்திற்கு வணக்கும் செலுத்த மண்டியிட சைகை காட்டினார். குதிரையும் முன்பக்க கால்களை மடக்க முயன்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓபிஎஸ்… ‘ஏம்பா, வாய் இல்லாத ஜீவனை போய், இப்படி பண்ரேயப்பா… இது தப்பு’ என அன்பாக திட்டிவிட்டு குதிரையை வணங்கி விட்டு அங்கிருந்து விலகிச் சென்று வாக்கு சேகரிப்பை தொடர்ந்தார்.

The post காலில் விழுந்த குதிரை திட்டிய ஓபிஎஸ் appeared first on Dinakaran.

Related Stories: