திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிப்பு

மதுரை, ஏப். 7: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து இன்று (ஏப்.7) முதல் வரும் 26ம் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குப் புறப்படும். இந்த ரயில்கள் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு ரயில் ஏப்.8ம் தேதி முதல் 27ம் தேதி வரை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் சேரன்மகாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், வில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சிப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: