மீண்டும் மோடி.. வேண்டும் மோடி என நாடே கூறுகிறது: வடசென்னை பாஜக வேட்பாளரை ஆதரித்து ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரம்..!!

சென்னை: மீண்டும் மோடி வேண்டும் மோடி என நாடே கூறி வருகிறது என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே மும்முனை போட்டி உருவாகியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் 19ல் பா.ஜ.க.வும், அக்கட்சியின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நான்கு பேரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து சென்னை நம்மாழ்வார்பேட்டையில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், மீண்டும் மோடி வேண்டும் மோடி என நாடே கூறி வருகிறது.

எங்கள் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி என கூற முடியும். ஆனால் இந்தியா கூட்டணியால் கூற முடியுமா..? என கேள்வி எழுப்பினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே அஜெண்டா, வளர்ச்சியடைந்த தேசத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது தான். இந்தியா கூட்டணிக்கு என்ன அஜெண்டா இருக்கிறது என்று அவர்களால் சொல்ல முடியுமா? என வினவினார். நாட்டை சூறையாடுவது தான் இந்தியா கூட்டணியின் எண்ணம். பா.ஜ.க. மீண்டும் வந்தால் நாடே பற்றி எரியும் என காங்கிரஸ் கூறுகிறது. இப்படிக் கூறுபவர்களால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும். தேர்தலை சந்திப்பதற்கு கூட பி.எப்.ஐ போன்ற தீவிரவாத அமைப்புகளின் துணையோடு காங்கிரஸ் செயல்படுகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி. கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ரூ. 1.46 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஆட்சியில் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்றால் தாமரைக்கு ஓட்டுப் போடுங்கள். உங்கள் குடும்பத்துக்காக இந்த தேர்தலில் வாக்களியுங்கள் என குறிப்பிட்டார். தொடர்ந்து, திருவள்ளூர் வேட்பாளர் பொன்.பாலகணபதி, மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரசாரம் செய்கிறார்.

The post மீண்டும் மோடி.. வேண்டும் மோடி என நாடே கூறுகிறது: வடசென்னை பாஜக வேட்பாளரை ஆதரித்து ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: