சென்னை : சென்னை அடையாறில் அரசு ஒப்பந்தக்காரர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. சென்னை அபிராமபுரத்தில் ஓய்வுபெற்ற செயற்பொறியாளர் தங்கவேலு வீடுகளிலும் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.