அந்த கட்சியின் தேர்தல் சின்னம் `பானை’. மக்களிடம் இந்த `பானை’ சின்னத்தை கவர வைக்க பெரியளவில் பானையை செய்து அனுப்ப புதுச்சேரியை சேர்ந்த பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் முடிவு செய்தார். இதற்காக வில்லியனூரை சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரிடம் 6 பானைகள் செய்வதற்காக 3 நாட்களுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்தார். இதனை தொடர்ந்து, 4 கலைஞர்கள் இரவு பகல் பாராது உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்து முடித்துள்ளனர்.
இந்த பானைகள் ஒவ்வொன்றும் 7 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டவை. இந்த சைஸ் பானை செய்வது இது தான் முதன்முறை. புதுச்சேரியில் தயாரான இந்த மெகா சைஸ் பானைகள் நேற்று மாலை சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு பானை, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. இதேபோல், விழுப்புரம் மக்களவை தொகுதிக்கும் பானைகள் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.
The post வி.சிறுத்தைகள் வேட்பாளர்களுக்கு புதுச்சேரியில் தயாரான மெகா சைஸ் பானை: 7 அடி உயரம், 6 அடி அகலத்தில் பிரமாண்டம் appeared first on Dinakaran.