பச்சை மிளகாய் விளைச்சல் அமோகம்

அரூர், ஏப்.5: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், பச்சை மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். நாற்று நட்ட 3 மாதத்தில் செடிகள் வளர்ச்சியடைந்து, காய்கள் பிடிக்க தொடங்கும். சுமார் ஒன்றரை வருடம் வரை, தொடர்ந்து காய்க்கும் தன்மை கொண்டது. அரூரில் விளைவிக்கும் மிளகாய் காரத்தன்மை கொண்டதாக உள்ளதால், வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மிளகாய் சீசன் துவங்கியுள்ளதால், அரூர் பகுதியில் மிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ளது. விவசாயிகள் மிளகாய்களை பறித்து அரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். மார்க்கெட் மற்றும் சந்தைகளில் பச்சை மிளகாய் கிலோ ₹40க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரம் ஒருமுறை மிளகாய்களை பறித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். வரத்து அதிகரித்துள்ளதால் மார்க்கெட்டில் மிளகாய் விலை உயர வாய்ப்பு குறைவு என்பதால், விவசாயிகள் பலர் மிளகாயை வற்றலாக்கி விற்பனை செய்கினறனர்.

The post பச்சை மிளகாய் விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: