இந்த மக்களவை தேர்தலில் சிந்தித்து புரிந்துகொண்டு சரியான முடிவை எடுங்கள்: வாக்காளர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

புதுடெல்லி: இந்த மக்களவை தேர்தலில் சிந்தித்து புரிந்து கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: இந்தியா தற்போது முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. நாட்டைக் கட்டியெழுப்புபவர்களுக்கும், நாட்டை அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக உங்களின் எதிர்காலம் உங்களின் கைகளில் தான் உள்ளது. எனவே வாக்களிக்க போகும் முன்னர் சிந்தித்து, புரிந்துகொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் இளைஞர்களுக்கு வேலை உறுதி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உத்தரவாதம், ஒவ்வொரு ஏழைப் பெண்ணுக்கும் ரூ.1 லட்சம், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 400, ஜாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார கணக்கெடுப்பு மற்றும் அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ என்றால் வேலையின்மை உறுதி, விவசாயிகள் மீதான கடன் சுமை, பெண்களுக்கு பாதுகாப்பற்றநிலை, உரிமைகள் இல்லாத நிலை, வேலை உத்தரவாதம் இல்லாத தொழிலாளர்கள், பாகுபாடு, சுரண்டல், சர்வாதிகாரம்,போலி ஜனநாயகம். எனவே இந்த இரண்டையும் சிந்தித்து, உங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது என்பதை புரிந்துகொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post இந்த மக்களவை தேர்தலில் சிந்தித்து புரிந்துகொண்டு சரியான முடிவை எடுங்கள்: வாக்காளர்களுக்கு ராகுல் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: