மதுராந்தகம் ஒன்றியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் நடப்பதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்: பாமக வேட்பாளர் விரக்தி

மதுராந்தகம்: மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிப்பதை வாக்களியுங்கள் நடப்பதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என விரக்தியுடன் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் விரக்தியுடன் கூறினார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள மெய்யூர், மாமண்டூர், புக்கத்துறை, புழுதிவாக்கம், வையாவூர், படாளம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் திறந்த வேனில் நின்றபடி கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வேடவாக்கம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர். பெண்கள் கூட்டமே இல்லாமல் இருந்தது. வேட்பாளருடன் மற்ற ஊர்களில் இருந்து வந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மட்டுமே உடன் இருந்தனர்.

அப்போது, வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் பேசுகையில், ‘மருத்துவர் அய்யா ஆசி பெற்ற சின்னம் மாம்பழம். பிரதமர் மோடியின் ஆசி பெற்ற சின்னம் மாம்பழம். எனவே மாம்பழம் சின்னத்திற்கு நீங்கள் எல்லாம் வாக்களிப்பதை வாக்களியுங்கள் நடப்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்’ என விரக்தியுடன் பேசினார். இதனையடுத்து அங்கிருந்து புழுதிவாக்கம் கூட்டு சாலையில் உள்ள கடைகளில் வேட்பாளர் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். மேலும் தர்பூசணி கடையில் தன்னுடன் வெயிலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு வெப்பத்தை தணிக்க தர்பூசணி பழம் வாங்கி கொடுத்தார். வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு போதிய நிதி உதவி வழங்கவில்லை என வேட்பாளர் மீது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றவரிடம் கூறி கவலை அடைந்தனர்.

The post மதுராந்தகம் ஒன்றியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் நடப்பதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்: பாமக வேட்பாளர் விரக்தி appeared first on Dinakaran.

Related Stories: