டெல்லியில் 29-வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் 29-வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், பட்டாபிராமன் பங்கேற்றுள்ளனர். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே-ல் கர்நாடகம் தர வேண்டிய 10 டி.எம்.சி. காவிரி நீரை முழுமையாக திறந்து விட தமிழ்நாடு வலியுறுத்த உள்ளது.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 5 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். 2 மாதங்களிலும் 1.5 டி.எம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி நீர், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நீரையும் திறக்க உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் குடிநீர் பிரச்சனையால் கூடுதல் நீர் தேவை என்பதால் தொடர்ந்து தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு கூற திட்டமிட்டுள்ளது. கர்நாடக அணைகளில் நீர் இருப்பு உள்ளதால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடலாம் என வலியுறுத்த தமிழ்நாடு முடிவு செய்திருக்கிறது.

The post டெல்லியில் 29-வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: