இன்று இரவு 10 மணியளவில் மதுரை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா: நாளை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்!


சென்னை: இன்று இரவு 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக தனிக் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதில் பாமக தவிர்த்து அனைத்தும் உதிரி கட்சிகள் என்பதால் பெரிய அளவில் வாக்குகள் கிடைப்பது அரிது என்றே அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜ கூட்டணி வேட்பாளர்கள் 3வது இடத்தில் தான் இருப்பார்கள் என்று ஒன்றிய உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் பாஜ தேசிய தலைவர்களும் அடிக்கடிவந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று இரவு 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார்.

சிவகங்கை, தென்காசியில் தே.ஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நாளை காரைக்குடியில் நடக்கும் ரோடு ஷோவில் அமித்ஷா பங்கேற்கிறார். நாளை மாலை 3 மணிக்கு தென்காசியில் ரோடு ஷோவில் அமித் ஷா பங்கேற்கிறார். நாளை 5 மணிவாக்கில் குமரியில் நடக்கும் ரோடு ஷோவில் அமித் ஷா பங்கேற்கிறார்.

The post இன்று இரவு 10 மணியளவில் மதுரை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா: நாளை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்! appeared first on Dinakaran.

Related Stories: