வரும் 5ம் தேதி முதல் சுப.வீரபாண்டியன் பிரசாரம்

சென்னை: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஏப்.5ம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்குச் சேகரிக்கிறார்.

அதன் விவரம் பின்வருமாறு: ஏப்.5ம் தேதி சிவகங்கை, 6ம் தேதி மதுரை, 7ம் தேதி தேனி, 8ம் தேதி விருதுநகர், 9ம் தேதி திருநெல்வேலி, 10ம் தேதி தூத்துக்குடி,11ம் தேதி கோயம்புத்தூர், 13ம் தேதி நீலகிரி, 14ம் தேதி பொள்ளாச்சி, 15ம் தேதி திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

The post வரும் 5ம் தேதி முதல் சுப.வீரபாண்டியன் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: