கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி நாளை வேட்புமனு தாக்கல்..!!

டெல்லி: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஏப்.26ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 20 மக்களவை தொகுதிகளில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக அனைவரின் பார்வையும் வயநாடு தொகுதியில் பக்கம் திரும்பியிருக்கிறது. இந்நிலையில் வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். வயநாடு தொகுதியில் நாளை மதியம் 12 மணி அளவில் தேர்தல் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

நாளை மறுநாளுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுவதால் நாளை ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வயநாடும் ஒன்று. கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

The post கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி நாளை வேட்புமனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: