விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை!

டெல்லி: சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய விசாரணை அமைப்புகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அதிரடி அறிவுரை வழங்கியுள்ளார். சி.பி.ஐ. விசாரணை அமைப்பின் 20ம் ஆண்டு துவக்கவிழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. சி.பி.ஐ. அமைப்பின் முதல் தலைவரான டிபி கோலிவை நினைவு கூறும்வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபடி சந்திரசூட் கூறியதாவது; சிபிஐ, ஐடி உள்ளிட்ட விசாரணை அமைப்புகளால் நடத்தப்படும் சோதனைகள், தேவையின்றி தனிப்பட்ட சாதனங்களைப் பறிமுதல் செய்தல் போன்ற சம்பவங்கள், விசாரணை அமைப்புகளுக்கும் தனிநபர் உரிமைகளுக்கும் இடையே நடுநிலைத்தன்மை அவசியம் என்பதை உணர்த்துகிறது.

புதிய குற்றவியல் சட்டங்களில், நீதிமன்றங்களுக்கும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் சான்றுகள் உட்படத் தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைப் பெறுவதற்கான அதிகாரத்தை வழங்கும் பிரிவு 94 மற்றும் பிரிவு 185 பற்றி நீதிபதி சந்திரசூட் கருத்து. விசாரணை அமைப்புகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும். குற்றவியல் நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

 

The post விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை! appeared first on Dinakaran.

Related Stories: