கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய கொடியேற்றம்

கந்தர்வகோட்டை,ஏப்.2: கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய கொடியேற்றும் விழா நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பிரசித்தி பெற்ற மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் விழாவின் தொடக்க நிகழ்வான திருச்சிலுவை கொடியானது புனித செபஸ்தியார் ஆலயத்தை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக கிளாரினெட் கச்சேரி இசை முழக்கத்துடன் எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று செபஸ்தியாரை வழிபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி இன்று (2ம்தேதி) இரவு நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருவிழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக ஐம்பதுக்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தா்கள், பொதுமக்கள் வசதிக்காக திருச்சி, புதுக்கோட்டை, செங்கிப்பட்டி, தஞ்சாவூர், கந்தர்வகோட்டை ஆகிய பகுதியிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

The post கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: