ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் பூஜை செய்வதற்கு இடை கால தடை விதிக்க கோரிக்கை: உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் ஞானவாபி வழக்கு தொடர்பான மேல்முறையீடு மசூதி தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து அமைப்பினர் பூஜைகள் செய்வதற்கு வாரணாசி கிழமை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தனர். அத்தகைய அனுமதியை அலகாபாத் நீதிமன்றம் உறுதி செய்தது. இதற்கு எதிராக மசூதி அமைப்பின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பூஜை செய்வதற்கு இடை கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. இஸ்லாமிய அமைப்பினர் மசூதிக்குள் என்ன வழிபாடுகள் நடத்தினரோ அத்தகைய வழிபாடுகள் தொடரும் என்றும் இந்து அமைப்புகள் நடத்திவரும் பூஜைகளும் தொடரும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

ஞானவாபி மசூதிக்குள் அகழ்வாய்வு நடத்துவது, அறிவியல் சார்ந்த முக்கிய ஆய்வுகள் நடத்துவது, வளாகத்திற்குள் எந்த மாதிரியான பூஜைகள் நடைபெறுகிறது என பல்வேறு வழக்குகள் வாரணாசி நீதிமன்றத்திலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில் இத்தகைய உச்சநீதிமன்றத்தின் உத்தரவு முக்கியமானதாக விளங்குகிறது.

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் இருக்கக்கூடிய ஞானவாபி மசூதியின் உள்ளே இந்து கடவுள்களின் உருவங்கள் உள்ளதால் வழிபாடு நடத்த வேண்டும் என இந்து பெண்கள் 7 பேர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது . அந்த மனுவில் மசூதியின் பாதாள அறையில் பூஜைகள் நடத்துவதற்கு அனுமதியானது வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

The post ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் பூஜை செய்வதற்கு இடை கால தடை விதிக்க கோரிக்கை: உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: