குளித்தலை அருகே லாலாபேட்டை மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி விளக்கு பூஜை

குளித்தலை, மார்ச் 30: தமிழகத்தில் பருவமழை காலத்தில் இந்த வருடம் எதிர்பார்த்ததை விட கூடுதலான மழை பெய்தது. வெள்ளம் இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்து விவசாயம் செழிக்கும் அளவிற்கு இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது கோடை காலம் என்பதால் கோடைகால பருவம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை 10 மணிக்கு மேல் மாலை 4 மணிக்குள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் குளிர்ந்த சூழ்நிலைக்கு வருவதற்கு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் சிந்தலவாடி மாரியம்மன் ஆலயத்தில் மழை வேண்டி எழுத்துக்கள் வரைந்து அதன் மேல் மண் சட்டி வைத்து விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. தற்பொழுது வெப்பம் அதிகமாக இருப்பதனால் வெப்பம் குறைவதற்காக அம்மன் சன்னிதானத்தில் மழை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை லாலாபேட்டை மாற்றுத்திறனாளி நாகராஜன் மற்றும் அவரது நண்பர்கள் செய்திருந்தனர்.

The post குளித்தலை அருகே லாலாபேட்டை மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி விளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: