100% வாக்குப்பதிவை வலியுறுத்தி காயல்பட்டினம், புன்னக்காயலில் போலீசார் கொடி அணிவகுப்பு

ஆறுமுகநேரி,மார்ச் 31: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இத்தேர்தலில் அனைத்து மக்களும் அச்சமின்றி 100% வாக்களிக்கும் வகையில் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் காயல்பட்டினம், புன்னக்காயல் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடந்தது. காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து துவங்கிய கொடி அணிவகுப்பானது போஸ்ட் ஆபீஸ், காய்கறி மார்க்கெட், தாயும்பள்ளி, மாட்டுக்குளம் வழியாக சென்று காயல்பட்டினம் கடற்கரையில் நிறைவடைந்தது.

அப்போது கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள், விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களிடம் தங்களது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களிடம் அச்சமின்றி வாக்களிக்கும் படி நீங்கள் கூறவேண்டும் என திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக இதேபோல் புன்னைக்காயலில் நடந்த கொடி அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகநேரி ஷேக் அப்துல் காதர், கிரைம் மகாலட்சுமி, ஆத்தூர் மாரியப்பன், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தினகரன், ஆறுமுகநேரி எஸ்.ஐ. பிரபாகுமார் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார், துணை ராணுவப் படையினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி காயல்பட்டினம், புன்னக்காயலில் போலீசார் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: