இமாச்சலில் போட்டியிடும் நடிகை கங்கனாவுக்கு பா.ஜவில் எதிர்ப்பு

சிம்லா: இமாச்சல் மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் நிறுத்தப்பட்ட நடிகை கங்கனா ரனாவத்திற்கு பா.ஜவிலேயே எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளது. பிரபல நடிகை கங்கனா ரனாவத் மக்களவை தேர்தலில் இமாச்சலபிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் அங்கு பிரசாரத்தையும் தொடங்கி விட்டார். ஆனால் அவருக்கு பா.ஜவிலேயே எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. இமாச்சல் பாஜ முன்னாள் மாநிலத் தலைவரும், மூன்று முறை எம்.பி.யாக இருந்தவரும், குலு பகுதியின் முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசுமான மகேஷ்வர் சிங் தற்போது நடிகை கங்கனாவை அங்கு நிறுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 2022 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்போது எம்பி தேர்தலில் மண்டி தொகுதி கங்கனாவுக்கு ஒதுக்கப்பட்டதால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் கங்கனா நிறுத்தப்பட்டதால் அதிருப்தி அடைந்த உள்ளூர் தலைவர்கள் தனியாக திரண்டு ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அவர்கள் கங்கனாவை மாற்றும்படி கட்சித்தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இமாச்சலில் போட்டியிடும் நடிகை கங்கனாவுக்கு பா.ஜவில் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: