சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தாம்பரம் சண்முகம் சாலை ஜிஎஸ்டி சாலையுடன் இணைப்பு: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிர்வாக ஒப்புதல்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம் சண்முகம் சாலையை ஜிஎஸ்டி சாலையுடன் இணைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  வருகிறது. அதன்படி ஏற்கனவே பல ஆண்டுகளாக நடந்து வந்த மேம்பால பணிகளை  துரிதப்படுத்தி திறக்கப்பட்டுள்ளது.  தற்போது கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம், வேளச்சேரி பாலத்தில் ஒரு பகுதி திறக்கப்படுகிறது. தொடர்ந்து மேடவாக்கம் ஒரு பகுதி மற்றும் வேளச்சேரி பாலத்தில் மற்றொரு பகுதி டிசம்பர் இறுதிக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் தாம்பரம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வுக்கு செல்லும் போது சண்முகம் சாலையை, ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இதையேற்று, தாம்பரம் சண்முகம் சாலை- ஜிஎஸ்டி சாலையை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய நிதி ஒதுக்கீடு ெசய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆக.27ம் தேதி நடந்த சட்டப்பேரவை மானியக்ேகாரிக்கையின்  போது, தாம்பரம் சண்முகம் சாலையை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலை அமைக்கப்படும் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் நகராட்சி சண்முகம் சாலையை பராமரிப்பு செய்கிறது. இந்த சாலையின் கிளை சாலையான கக்கன் சாலை மற்றும் ஜிஎஸ்டி  சாலை இணைப்பு  பகுதிகளில் தாம்பரம் மார்க்கெட் உள்ளது. சண்முகம் சாலை ஜிஎஸ்டி சாலையுடன் இணையும் வலது புறத்தில் தாம்பரம் ரயில்வே மேம்பாலம் 0.60 மீட்டரில் உள்ளது. இந்த சாலைகளின் இணைப்பு பகுதி 30 மீட்டரில் உள்ளது. இந்த சாலையை பயன்படுத்துவோர் பெரியார் சாலை வழியாக சென்று 80 மீட்டர் தூரம் சென்று ஜிஎஸ்டி சாலையை அடைகின்றனர். இந்த நேரத்தில் சண்முகம் சாலையை ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்கும் வகையில், பாதசாரி சுரங்கப்பாதை விரிவாக்கம் செய்ய வேண்டும் மற்றும் இடமாற்றம் செய்து 10 மீட்டர் அகலப்படுத்த வேண்டும்.ரயில்வே ஜங்ஷன் அருகே நிலம் கையகப்படுத்தி அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக விரிவான அறிக்கை தயார் செய்ய 30 லட்சம் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தாம்பரம் சண்முகம் சாலை ஜிஎஸ்டி சாலையுடன் இணைப்பு: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிர்வாக ஒப்புதல்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: