சென்னையில் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்

சென்னை: சென்னையில் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். வில்லன் கதாபாத்திரங்களில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை டேனியல் பாலாஜி பெற்றுள்ளார். நெஞ்சுவலி காரணமாக கொட்டிவாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post சென்னையில் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: