ஐபிஎல் டி20 கிரிக்கெட்; பெங்களூரு – கொல்கத்தா இன்று மோதல்

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகின்றன. டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூரு முதல் போட்டியில் சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்த நிலையில் சொந்த மண்ணில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது. இன்று அதனை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் உள்ளது.

விராட் கோஹ்லி சூப்பர் பார்மில் உள்ளார். கேமரூன்கிரீன், மேக்ஸ்வெல் எதிர்பார்த்த அளவில் ஆடவில்லை. தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் வலு சேர்க்கின்றனர்.மறுபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்திய உத்வேகத்தில் உள்ளது. பில் சால்ட், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ரானா, ஆந்த்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், ரிங்கு சிங் என அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது.

பவுலிங்கில் சுனில்நரேன் கடந்த போட்டியில் அசத்தினார். வருண் சக்ரவர்த்தி, மிட்செல் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்கியதால் இன்று தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நடப்பு சீசனில் இதுவரை நடந்துள்ள 9 போட்டியிலும் உள்ளூரில் ஆடிய அணிகள் தான் வென்றுள்ளது. அதனை இன்று ஆர்சிபி தக்க வைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். இரு அணிகளும் இதற்கு முன் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 18, ஆர்சிபி 13ல் வென்றுள்ளன.

The post ஐபிஎல் டி20 கிரிக்கெட்; பெங்களூரு – கொல்கத்தா இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: