திமுக கூட்டணிக்கு ஆதரவு

 

திருச்சி, மார்ச் 29: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பது என்று ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் பரமசிவம், செல்லப்பிள்ளை முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்போம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளிடம் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க பாடுபடுவோம் என்றார். கூட்டத்தில் ஒன்றியத்தில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவிக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்குவதுடன் புதிய மின்சார திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அறிவிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செய்தி தொடர்பாளர் அரவிந்தசாமி வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக கூட்டணிக்கு ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: