பெங்களூரு குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளியை கைது செய்தது என்ஐஏ

புதுடெல்லி: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக என்ஐஏ அறிவித்துள்ளது. பெங்களூரு புரூக்பீல்ட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி குண்டுவெடித்தது. இந்த வழக்கை மார்ச் 3ம் தேதி முதல் என்ஐஏ விசாரித்து வந்தது. இதுதொடர்பாக கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 , உத்தரபிரதேசத்தில் ஒன்று உட்பட 18 இடங்களில் என்ஐஏ குழுக்கள் சோதனை நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து முக்கிய குற்றவாளியான முஸம்மில் ஷரீப் என்பவரை என்ஐஏ நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் குண்டுவெடிப்பை நடத்திய முக்கிய குற்றவாளியான முசாவிர் ஷசீப் ஹுசைன், மற்றொரு சதிகாரரான அப்துல் மதீன் தாஹா ஆகியோரை பிடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள முஸம்மில் ஷரீப் குண்டு வைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததாக என்ஐஏ குற்றம் சாட்டி உள்ளது.

The post பெங்களூரு குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளியை கைது செய்தது என்ஐஏ appeared first on Dinakaran.

Related Stories: