சின்னத்துக்காக தேர்தல் கமிஷன் தொங்கவிடுது… மற்றவருக்கு விளக்கு பிடிக்கும் வேலை எனக்கு இல்லை: பொங்கிய மன்சூர் அலிகான்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. அப்போது அங்கு வந்த நடிகரும் சுயேச்சை வேட்பாளருமான மன்சூர்அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது: ஆனானப்பட்ட ஆட்களே சின்னத்திற்காக தொங்கிக் கொண்டு உள்ளார்கள். தேர்தல் கமிஷன் அனைவரையும் தொங்க விட்டுள்ளது. குத்துயுரும் குலைஉயிருமாக ஜெயலலிதா இருக்கும்போது, கண்டுகொள்ளாமல் விட்ட பாவத்திற்காக ஓபிஎஸ் தற்போது என்னைப்போல் சுயேச்சை சின்னத்திற்காக கெஞ்சிக் கொண்டு உள்ளார்.

நிலைமை அந்த மாதிரி உள்ளது. நான்தான் முதல் முதலில் தமிழகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தேன். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான்தான் வெற்றி பெறுவேன். முன்னாள் முதல்வரை தீர்த்து கட்டியது மோடி அரசுதான். வெளிப்படையாக பேசிக் கொண்டுள்ளேன். இதுகுறித்து எல்லா ஆவணங்களையும் வாங்கி வைத்துள்ளேன்.

இந்த பக்கம் அதிமுக, அந்த பக்கம் பாஜ. இரண்டையும் எதிர்ப்பதுதான் எனது நோக்கம். அதிமுக, பாஜ மட்டுமல்ல அனைவரையும் நான் தாக்கி பேசுவேன். எனக்கும் விவசாய சின்னம் வந்தது. ஆனால் மனசாட்சி இடம் கொடுக்காததால் விவசாய சின்னத்தை டிக் பண்ணவில்லை. டார்ச் லைட் சின்னமும் இருந்தது எனக்கு அது வேண்டாம். விளக்கு பிடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

காரில் சோதனை ‘பவுடர் பூசவா?’
வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் மேல்பட்டியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மன்சூர் அலிகானின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். காரில் ஏதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணித்தவர்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்துக் கொண்டனர். அப்போது, நடிகர் மன்சூர் அலிகான், ‘முகத்துக்கு போட்டுக் கொள்ளும் பவுடர் தான் இருக்கிறது, பூசி கொள்கிறீர்களா?’ என அதிகாரிகளை கலாய்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

The post சின்னத்துக்காக தேர்தல் கமிஷன் தொங்கவிடுது… மற்றவருக்கு விளக்கு பிடிக்கும் வேலை எனக்கு இல்லை: பொங்கிய மன்சூர் அலிகான் appeared first on Dinakaran.

Related Stories: