தேனி தொகுதி பாஜ கூட்டணி வேட்பாளரான அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு அசையும் சொத்துக்களாக ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 973, அசையா சொத்துக்களாக ரூ.57லட்சத்து 44 ஆயிரத்து 008, மொத்தமாக டிடிவி பெயரில் ரூ.77 லட்சத்து 26 ஆயிரத்து 981 மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன. டிடிவி தினகரன் மனைவி அனுராதா பெயரில் அசையும் சொத்துக்களாக ரூ.1 கோடியே 69லட்சத்து 25ஆயிரத்து 118, அசையா சொத்துக்களாக ரூ.2 கோடியே 48 லட்சத்து 79 ஆயிரத்து 707. இருவருக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.4 கோடியே 95 லட்சத்து 31ஆயிரத்து 806 மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன. மேலும், டிடிவி தினகரனுக்கு ரூ.9லட்சத்து 25 ஆயிரத்து 029 வங்கி மற்றும் தனிநபர் கடனாகவும், ஒன்றிய அரசு விதித்துள்ள பெரா நீதிமன்ற அபராத நிலுவையாக ரூ.28 கோடியும் உள்ளது. மனைவி அனுராதா பெயரில் ரூ.22 லட்சத்து 87 ஆயிரத்து 960 கடன் உள்ளது. மேலும், டிடிவி மீது 9 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஓபிஎஸ்சுக்கு ரூ.9.79 கோடி சொத்து; டிடிவிக்கு ரூ.4.95 கோடிதான் சொத்து appeared first on Dinakaran.