ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு ஏற்பு!

சென்னை: கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வேட்புமனு ஏற்கப்பட்டது. கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து வேட்புமனுக்கள் ஏற்பு. காஞ்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம், அதிமுக வேட்பாளர் ராஜசேகர், பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் வேட்புமனுக்கள் ஏற்பு. ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு ஏற்பு. ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் பேட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வேட்புமனு ஏற்பு. தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் மனு ஏற்கப்பட்டது.

 

The post ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு ஏற்பு! appeared first on Dinakaran.

Related Stories: