ஆந்திர மாநில போலீசாரின் உதவியுடன் டோல்கேட் தவிர்த்து வேறு வழிகளிலும் வாகன சோதனை: மாவட்ட எஸ்பி தகவல்

கும்மிடிப்பூண்டி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி சோதனைச் சாவடிகள் மட்டுமல்லாது ஆந்திர மாநில போலீசாரின் உதவியுடன் தொடர்ந்து பல்வேறு வழித்தடங்களில் சோதனை மேற்கொள்ள இருக்கிறோம் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேற்று வாகன சோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், தற்காலிக 5 சோதனைச் சாவடி மற்றும் நிரந்தர சோதனை சாவடிகள் என மொத்தம் 10 சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இதில், கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வாகனங்களில் எந்த வகையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சோதனை சாவடிகளை தவிர்த்து வேறு வழியில் செல்லும் வாகனங்களையும் ஆந்திர மாநில போலீசாரின் உதவியுடன் தொடர்ந்து பல்வேறு வழித்தடங்களில் சோதனை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார். இந்த ஆய்வின்போது கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி, ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் டில்லிபாபு, தனிப்பிரிவு போலீஸ் அருணகிரி உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர்.

The post ஆந்திர மாநில போலீசாரின் உதவியுடன் டோல்கேட் தவிர்த்து வேறு வழிகளிலும் வாகன சோதனை: மாவட்ட எஸ்பி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: