துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள்

 

பூந்தமல்லி: பூந்தமல்லி தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ம்தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கான 514 வாக்குப்பதிவு இயந்திரங்கள், லாரி மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.  பின்னர், அங்குள்ள தனி அறையில் இறக்கி வைக்கப்பட்டு, அனைத்து கட்சியினர் முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மொத்தம் 514 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 475 பாலட் யூனிட், 475 கண்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது‌. தற்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் முன்பு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அறை வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

The post துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் appeared first on Dinakaran.

Related Stories: