அனைத்து பஸ்கள் நின்று செல்ல ஆர்டிஓ உத்தரவு

 

பள்ளிபாளையம், மார்ச் 25: காகித ஆலை காலனியில், பஸ் நின்று செல்லும் என்ற ஆர்டிஓ வழங்கிய உத்தரவை பஸ் டிரைவர்களிடம் பொதுமக்கள் வழங்கி பிரசாரம் செய்தனர். ஈரோட்டிலிருந்து திருச்செங்கோடு செல்லும் பஸ்கள், காகித ஆலை காலனி நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்குவதில்லை. இதுகுறித்து பயணிகளின் புகாரின் பேரில், குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அதிகாரி முன்னிலையில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காலனி நிறுத்தத்தில் பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதன் பின்னும் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதில்லை என கூறப்படுகிறது. கடந்த வாரம், இந்த பிரச்னை தொடர்பாக தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதனை தடுக்கும் வகையில், காகித ஆலை காலனியில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலரின் உத்தரவு நகல் எடுக்கப்பட்டு, பஸ் கண்டக்டர், டிரைவர்களிடம் வழங்கப்பட்டது. இதில், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோவன், ஆலாம்பாளையம் பேரூர் செயலாளர் கார்த்திராஜ், காடச்சநல்லூர் முன்னாள் துணைத்தலைவர் சம்பத்குமார், வினோத்குமார், பிரேம்குமார், தனசேகர், வாசுதேவன், ரவி, சிவக்குமார், தமிழ்ழகன் கொமதேக குமரவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post அனைத்து பஸ்கள் நின்று செல்ல ஆர்டிஓ உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: