கும்மிடிப்பூண்டி அருகே சிவன் கோயில் கும்பாபிஷேகம்: எம்எல்ஏ பங்கேற்பு

 

கும்மிடிப்பூண்டி, மார்ச் 25: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அயநெல்லூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த அயநெல்லூர் ஊராட்சியில் பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் கடந்த 8ம் தேதி பந்தல் கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லக்ஷ்மி ஹோமம், கிராம தேவதா பூஜை, கோபூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் பூஜைகள் நடந்தன.

பின்னர் காமாட்சி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வார் சிவனுக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் புனித நீர் எடுத்து வந்து கோயிலை வலம் வந்து ராஜகோபுரம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பிற்பகல் ஆயிரம் பேருக்கு அன்னதானமும், ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணமும், விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது. இதில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கும்பாபிஷேக விழாவில் அயநெல்லூர் கிராம பெரியவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், இளைஞர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினார்.

The post கும்மிடிப்பூண்டி அருகே சிவன் கோயில் கும்பாபிஷேகம்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: